கட்சி தாவும் 15 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு!

By காமதேனு

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறி ஆளும் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் அக்கட்சியை பலவீனப்படுத்தும் வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்களை ஒதுக்க மறுத்து வருகிறார்.

சோனியா, ராகுல்

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி சார்பாக வெற்றி பெற்ற 15 எம்எல்ஏக்கள் அந்த கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, பாபா சித்திக் மற்றும் அவருடைய மகன் ஜீஷான் சித்திக் ஆகியோர் தேர்தலுக்கு முன்பாக அஜித் பவார் தலைமையிலான என்சிபி அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா கட்சியை உடைத்து எம்எல்ஏக்களை இழுத்து அங்கு ஆட்சி மாற்றத்தை பாஜக ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியையும் உடைக்கும் திட்டத்தை அங்கு பாஜக நிறைவேற்றத் தொடங்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE