புதுச்சேரி முதல்வருடன் பிரதமரின் மூத்த சகோதரர் சந்திப்பு - கோயில்களில் தரிசனம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சோம்பாய் மோடி இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சோம்பாய் மோடி. இவர் சென்னையிலிருந்து இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். அவரை பாஜகவினர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள புதுவை சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அங்கு அவரை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர். அவர் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

பிரதமரின் மூத்த சகோதரருக்கு பூங்கொத்து அளித்து வரவேற்ற முதல்வர் அவரை நலம் விசாரித்ததுடன், புதுவை மாநிலச் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். மேலும், மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் அவரது சகோதரரிடம் முதல்வர் தெரிவித்துக்கொண்டார். முதல்வர் சந்திப்புக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ள முக்கிய கோயில்கள் உள்ளிட்டவற்றுக்கு பிரதமரின் மூத்த சகோதரர் சென்றதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE