குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை யானை முகாம்: இருசக்கர வாகனங்களை விரட்டுவதால் அச்சம் 

By ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை யானை முகாமிட்டு விரட்டுவதால் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் இருபுறங்களிலும் சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் பலாப்பழங்களை உட்கொள்ள இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் குன்னூர் மரப்பாலம் பகுதியில் ஒற்றைக் கொம்பன் யானை ஒன்று முகாமிட்டுள்ளது.

இதனை அவ்வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் மட்டும் செல்ஃபி எடுத்து வருகின்றனர். மேலும் இந்த யானை அவ்வப்போது குடிநீருக்காக சாலையை கடந்து செல்வதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை விரட்டுவதால் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வனப்பகுதிகளில் இந்த யானையைக் கண்காணிக்க வனத்துறை குழு அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE