சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் தம்பி அண்ணாமலை, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடநூல்களை பொறுமையாக படிக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய வெள்ளை அறிக்கை என தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.
பாடநூல்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழக ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து ஐ.லியோனி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,‘’ டெல்லியில் நடந்த குடியரசு ஊர்வலத்தின் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு அடங்கிய வாகனம் புறக்கணிக்கப்பட்டது. அந்த வாகனங்களை தமிழக முழுவதும் அனுப்பி அவற்றின் வரலாற்றை தெரிய வைத்தவர் தமிழக முதல்வர்.
பாட நூல்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆதாரமற்ற புகாரை ஆளுநர் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ஆளுநர் கூறி வருவது எங்களுக்கு நல்லதாகத்தான் தெரிகிறது.
அவர் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறும் நிலையில், உண்மையான கருத்துக்களை மக்களிடம் எடுத்து சொல்ல எங்களுக்கு நல்ல வாய்ப்பை அவர் ஏற்படுத்தித் தருகிறார் என்பதுதான் உண்மை.
திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக நாங்கள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் மிகச் சரியாக செய்து வருகிறார். திராவிடம் என்ற பழுத்த மரத்தை பொய் என்ற கல்லை வீசி சாய்விட வேண்டுமென நினைக்கிறார். கல்லை வீச வீச அந்த மரத்தில் உள்ள நல்ல கனிகள் மக்களை சென்றடையும். சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தம்பி அண்ணாமலை வெள்ளை அறிக்கை கேட்கிறார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை அவர் நிதானமாக படிக்க வேண்டும். அதுவே வெள்ளை அறிக்கைத்தான்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!