மக்களவைத் தேர்தல் வருவதால் பாஜகவினரும், மோடியும் பொய்யைப் பரப்புவார்கள். அதனால் அனைவரும் கூகுளில் தேடிப் பாருங்கள், உண்மை தெரியும் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிறைவு நாள் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்றார்.
அப்போது தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை தான் விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன. இப்போது வாரத்திற்கு ஒன்று நடத்தப்படுகிறது.
திமுக சார்பில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் சிறப்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் ஏற்பாடு செய்யப்படும். மக்களவைத் தேர்தல் வருவதால் பாஜகவினரும், மோடியும் பொய்யைப் பரப்புவார்கள். அதனால் அனைவரும் கூகுளில் தேடிப் பாருங்கள் உண்மை தெரியும்" என்றார்.
இந்த போட்டியில் முதல் பரிசு 1 லட்சத்து 100 ஆம்பூர் அணியும், இரண்டாம் பரிசு 50 ஆயிரத்து 100 திருப்பத்தூர் அணியும் வென்றd. மூன்றாம் பரிசு 25 ஆயிரத்து 100, நான்காம் பரிசு 15 ஆயிரத்து நூறு மற்றும் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசு மூன்று என மொத்தம் 11 பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், வில்வநாதன், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!