அதிர்ச்சி... முதல்வரின் மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

By காமதேனு

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபப் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைவர்களும் காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறும் வகையில் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட் உள்பட மூத்த தலைவர்கள் கட்சி மேலிட தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. அதில் நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையை சேர்ந்த டிரைடன் ஹோட்டல்ஸ் அண்ட் ரெசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பணமோசடி செய்ததாக புகாரில் பெமா சட்டத்தின்படி ஜெய்ப்பூர், உதய்ப்பூர், மும்பை, டெல்லி உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த நிறுவனத்தின் இயக்குனர் ரத்தன் காந்த் சர்மா, அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுடன் தொடர்பு வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை வைபவ் கெலாட்டுக்கு சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்துள்ளது. இதுதவிர ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுவா சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். இதுதவிர தவுசா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உள்பட வேறு சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகள் மூலம் தங்களை அச்சுறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் சாடியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE