மருத்துவமனையில் இமாச்சல பிரதேச முதல்வர் திடீர் அனுமதி!

By காமதேனு

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர், இன்று காலை வயிற்று வலி காரணமாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனைகள் மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு

வயிற்றில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!

அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!

பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!

தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்

இளம்பெண் தீப்பற்றி எரிந்து பலி... போலீஸார் விசாரணை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE