ரஜினி வீட்டுக்கு அழைக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி... உற்சாகத்துடன் கலந்து கொண்ட ஓபிஎஸ்!

By காமதேனு

நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் அப்படி வெகு விமரிசையாக நவராத்திரி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செய்திருந்தார். அத்துடன் ஏராளமான விவிஐபிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ரஜினி வீட்டில் ஓபிஎஸ்

ஓபிஎஸ்க்கு லதா ரஜினிகாந்த் வரவேற்பு

இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ரஜினி வீட்டில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் மனைவியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மற்றவர்கள் எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் அழைக்கப்பட்டிருக்க, அரசியல்வாதி என்ற முறையில் அழைக்கப்பட்டிருந்த ஒரே நபர் ஓபிஎஸ் தான். அதனால் மிகுந்த உற்சாகத்துடன் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அவருக்கு ரஜினி குடும்பத்தினர் அன்புடன் வரவேற்பு மற்றும் மரியாதை அளித்தனர்.

மாநிலம் முழுவதும் புரட்சிப் பயணம் தொடங்க இருந்த ஓபிஎஸ், கடந்த செப்டம்பர் மாதம் 2 ம் தேதி ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த அளவுக்கு ரஜினிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்த நிலையில் தற்போது நவராத்திரி விழாவிற்கு அழைக்கப்பட்டதால் ரஜினியும் அதே அளவுக்கு ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று மகிழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE