அதிர்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு!

By காமதேனு

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்கள்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ. 1,924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE