தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

By காமதேனு

``ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார்'' என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’திமுக ஆட்சியில் 6 ராஜ கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 6 ராஜ கோபுரங்கள் கட்டப்பட்டு வருகிறது. 13 திருத்தேர்கள் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது வீதி உலா வந்து கொண்டு இருக்கிறது.

குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.85 லட்சம் செலவில் 5 ராஜகோபுரங்கள் கட்டவும், ரூ.53 லட்சத்தில் புதிய மரத்தேர், அன்னதான கட்டிடம் ரூ. 49 லட்சம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சியில் இதுவரை 1093 கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 5472 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் தமிழகத்தின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறியடித்து தமிழக அரசு செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டு அரசுக்குத் தொந்தரவு செய்து வருகிறார் ஆளுநர்" என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!

பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!

பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE