சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்! ஆளுநரை வலியுறுத்தும் அமைச்சர் பொன்முடி

By காமதேனு

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழக ஆளுநர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஆர்.என்.ரவி, பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘’தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூற தவறியதாக, சுதந்திரப் போராட்ட வரலாற்றையே தெரிந்தவர் போல ஆளுநர் கருத்தை கூறி இருக்கிறார். அதற்கான பதிலை நேற்று திமுக நாடாளுமன்ற குழுவினுடைய தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் உண்மையிலேயே தமிழக போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகம் ஆட்சி குழு ( syndicate ) மற்றும் ஆட்சி பேரவை ( senate ) இரண்டும் சேர்ந்து 18.8.23, 20.9.23 அனுப்பி அனுப்பப்பட்ட தீர்மானம் இன்னும் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார். ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட கோப்புகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.

சங்கரய்யா மக்களுக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரியில் படிப்புகளை நிறுத்திவிட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு தகைசால் விருது சங்கரய்யாவிற்கு வழங்கியது. எனவே, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவை ஏற்றுக் கொள்ளாமல், பேசியிருப்பதை கேட்டாலே சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமா இல்லையா என்று தெரியும்.

மதுரையில் 2ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அன்றே அவருக்கு கௌரவ பட்டம் வழங்குவதற்கான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து இடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் இணையதளம் வாயிலாக கையெழுத்து போடலாம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE