திருப்பூர் மாநகர் பகுதிகளில் பரவலாக மழை - சாக்கடை கலந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

By KU BUREAU

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெப்பம் அதிகளவில் இருந்தது. மதியத்துக்கு மேல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், திடீரென லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது.

சிறிது நேரத்தில் பரவலாக கனமழை பெய்தது. பல்லடம் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை காரணமாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்தது. இதனால், வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் வாகனங்களை இயக்க அவதிப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE