அரசு முதன்மைச் செயலாளர் மகன் மரணம்... நேரில் அஞ்சலி செலுத்தி முதல்வர் ஆறுதல்!

By காமதேனு

சென்னையில், உடல்நலக்குறைவால் காலமான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார் மகன் அஷ்வின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் மகன் அஸ்வின் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறினார். செந்தில்குமார் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE