நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி: டி.டி.வி. தினகரன் முக்கிய முடிவு!

By காமதேனு

அமமுக செயற்குழு கூட்டம் திருச்சியில் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக தலைவர் சி.கோபால் தலைமையில் நவம்பர் 4 காலை 10 மணிக்கு திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ஜெயலலிதாவின் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் திருச்சி ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவேரி ஹாலில் நடைபெற உள்ளது.

டிடிவி தினகரன்

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்பது குறித்து இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE