அரியலூர்: அரியலூரில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அரியலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கான பேச்சுப்போட்டிகள் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) காலை தொடங்கியது. நிகழ்ச்சியை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தலைமைக் கழக பேச்சாளர்கள் தூத்துக்குடி சரத்பாலா,ஆடுதுறை உத்திராபதி, கவிஞர் சல்மா உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், அரியலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் திறளாக பங்கேற்று பேசி வருகின்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாலையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.
» குண்டர் தடுப்பு சட்டத்தை இஷ்டம்போல பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
» “போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு...” - பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் வேண்டுகோள்