பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

By காமதேனு

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி.

அதைத் தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன் காரணமாக பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில் பொன்முடி சார்பில், அவருக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 12-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடியும், அவரது மனைவியும் சிறையில் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்தது.

உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக வரும் மார்ச் 4-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அதுவரை சிறையில் சரணடைவதற்கான விலக்கு தொடரும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையானது ஏற்கெனவே, முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, இதனை ஏற்க முடியாது என தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்?: இன்று கூடுகிறது அதிமுக தொகுதி பங்கீட்டுக்குழு!

பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி: சோகத்தில் முடிந்த சுற்றுலா!

அதிர்ச்சி... பள்ளி பேருந்து மீது டிராக்டர் மோதி பயங்கர விபத்து: 4 மாணவர்கள் பலியான சோகம்!

குவார்ட்டர் பாட்டிலுக்கு பிப்.1 முதல் 10 ரூபாய் விலை உயர்கிறது!

தென் மாவட்ட பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்கும்... அமைச்சர் உறுதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE