அறம் விழுதுகள் அறக்கட்டளைக்கும் சமூக ஆர்வலர் சுபாஷ் சீனிவாசனுக்கும் ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளா் விருது’

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் அறம் விழுதுகள் அறக்கட்டளைக்கும் சமூக ஆர்வலர் சுபாஷ் சீனிவாசனுக்கும் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் கடந்த 2021ம் ஆண்டு முதல் வருடந்தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நூறு தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ‘தமிழ்நாடு பசுமை முதன்மையாளா் விருது’ தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்ட வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான 2023-ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை ராமநாமபுரம் அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் டாக்டர்.முகமது சலாவுதீன், சமூக ஆர்வலர் சுபாஷ் சீனிவாசன் ஆகியோர் பெற்றனர். மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இருவருக்கும் விருதையும், காசோலையையும் வழங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பத்மாஸனி உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE