கன்னியாகுமரியில் நவ.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

By காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக நவ.25-ம் தேதி வேலை நாளாக அமையும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

தமிழகத்துடன் கன்னியாகுமரி 1956 நவ.1-ம் தேதி இணைக்கப்பட்டது. இதனை ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘’1956 நவம்பர் 1-ம் தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதனைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி 'கன்னியாகுமரி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக நவம்பர் 25-ம் தேதி வேலை நாளாக அமையும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE