சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம்,சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த திமுக, அரசு தரப்பில் பங்கேற்பதாகக் கூறி, விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் 8 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
18-ம் தேதி கருணாநிதி படம் இடம்பெற்ற நாணய வெளியீட்டு விழா நடை பெறுகிறது. அதில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.
திமுக கூட்டணி கட்சி எம்பி.க்கள் 40 பேருக்கும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் ஜே.பி.நட்டா, விருந்து வைக்கிறார். எனவே பாஜகவுக்கும், திமுகவுக்கும் ரகசிய உறவு இருந்துவருகிறது. இதை சிறுபான்மை மக்கள் உணர்ந்துள்ளனர். கருணாநிதி படம் இடம்பெற்ற நாணயம் வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது. இவ்வாறு அவர் கூறினார்.
» மருத்துவ மாணவி படுகொலை: பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
» இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை ஆக.31-ம் தேதி வரை நீட்டிப்பு