நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை!

By காமதேனு

நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வள்ளலார் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளை இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டும், நாளை மறுநாள் குடியரசு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் தமிழகத்தில் 2 நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று இரவு முதலே ‘குடி’மகன்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கியுள்ளனர். பல இடங்களில் கைக்கொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

முன்னதாக ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டும், 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் இந்த 2 தினங்களிலும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 2 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE