பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் தீர்மானம்

By KU BUREAU

காஞ்சிபுரம்: சென்னையின் 2-வது பசுமை வெளி விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏகானபுரம் கிராமத்தில் 752-வது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கிராம மக்கள் கடந்த7 முறையாக நடைபெற்ற கிராம சபைக்கூட்டங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் 6 முறை விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

நேற்று சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்கள் பரந்தூர் விமானநிலையத்தை இந்தப் பகுதியில் அமைக்கக் கூடாது என்று 8-வது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் விமானநிலையம் அமைய உள்ள மற்ற பகுதிகளில் நடைபெறுவதாகவும், ஆனால்ஏகனாபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினார். ஏகனாபுரம் கிராமத்தில் அந்தப் பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE