ஒடிசா, திரிபுரா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

By காமதேனு

ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

பாஜக தங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளை பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்தே தமிழிசை, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாக தற்போது பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாஜகவின் மூத்த நிர்வாகிகள் ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பாஜகவின் தேசிய துணை தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், அவரை ஒடிசா ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்து குடியரசுத் தலைவர் மூலம் நியமித்துள்ளது. அதே போல், தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக தலைவர் இந்திரா சேனா ரெட்டி நல்லு திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE