மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
இந்தியா விடுதலை அடைந்ததன் 75 ஆண்டு கொண்டாட்டம், அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விஜயதசமி நாளான வரும் அக்டோபர் 24ம் அன்று தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 14ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 3 நாட்களாக இந்த மனுவின் மீது அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் இருந்து விரிவான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை பசும்பொன் தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் உள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறையால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர முடியாது என்றும் மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் பேரணியை நடத்திக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!