தஞ்சாவூர்: வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சுதந்திர தினமான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தியது தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் அருகில் இருந்து இன்று விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த பேரணி தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள சோழன் சிலையில் நிறைவடைந்தது.
பேரணிக்கு சங்கத்தின் மாநில தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பேரணியின் போது, மத்திய அரசு உடனடியாக எம்எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விளைபொருளுக்கான உரிய விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
» போதையில்லா தமிழகம்: உதகையில் 10 கி.மீ. தூரம் மாணவர்கள் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்!
» ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்!
விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த பேரணியில் விவசாயிகள் டிராக்டருடன் பங்கேற்றனர்.