ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் படிக்க ஆக.28-ல் அண்ணாமலை லண்டன் பயணம்

By KU BUREAU

சென்னை: தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பைமேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கிறார். இதனால் அவர் அதற்கான பணிகளையும் கவனித்து வருகிறார். லண்டனில் 3 மாதம் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிக்க உள்ளர்.

இந்த நிலையில், அண்ணாமலைலண்டன் சென்றால், தமிழக பாஜகவில்மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி பாஜகவினர் இடையேநிலவுகிறது. இதுதொடர்பாக டெல்லிதலைமையும் ஆலோசனை மேற்கொண்டது.

இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்ததாவது:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 28-ம் தேதிலண்டன் செல்ல உள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 2-ம் தேதி முதல் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை தொடங்க உள்ளார். 3 மாத காலம்லண்டனில் தங்கியிருக்கும் அவர், அங்கிருந்தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்வார்.

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே நீடிப்பார். தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புகிறது.கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம்போல, கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார். அடுத்த3 மாதங்களில், தேவைப்பட்டால் பாஜகமூத்த நிர்வாகிகள் காணொலியில்அண்ணாமலையுடன் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

இவ்வாறு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE