வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி

By KU BUREAU

சென்னை: சென்னை மண்டல வானிலைஆய்வு மையத்தின் இயக்குநர்பா.செந்தாமரை கண்ணன் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(மே 22) ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

இந்நிலையில், இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE