விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கவே நெருக்கடி : சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!

By காமதேனு

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கவே, தமிழ்நாடு அரசு நெருக்கடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் காலை 9 மணி முதல் 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியது. ஆனால் அதிகாலை 4 மணி முதல் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து உள்துறை செயலாளர் அமுதாவை, லியோ திரைப்பட தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்துக்கு தமிழ்நாடு அரசு ஏன் தருகிறது.

ஜெயிலர் படத்துக்கு இதுபோல் இடையூறு செய்யப்பட்டதா, நேரு விளையாட்டரங்கில்தான் ஜெயிலர் பாடல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் லியோ படத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். அதைத் தெரிந்துகொண்ட அரசு இந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

ஆனால் ஜெயிலர் படத்திற்கும் அதிகாலை 4 மற்றும் காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE