மத்திய அரசை கண்டித்து தென்காசியில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

By த.அசோக் குமார்

தென்காசி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, தென்காசியில் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை அலட்சியப்படுத்தியதை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து, குற்றவியல் சட்டத் திருத்தத்தை கண்டித்தும் மதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வாசுதேவ நல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் திருமலைக்குமார் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE