ராமேசுவரம் மீன் மார்க்கெட்டில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் 

By KU BUREAU

ராமேசுவரம்: ராமேசுவரம் நகர் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கடந்த வாரம் ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கைப்பற்றி அழித்தனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை ராமேசுவரம் நகர் மீன் மார்க்கெட்டில் ஆப்பிரிக்கன் கெழுத்தி மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லிங்கவேல் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது, பதப்படுத்தப்பட்டு கெட்டுப்போன 8 கிலோ மீன்களை கண்டறிந்து பறிமுதல் செய்து பின்னர் அழித்தனர். மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொதுமக்கள் பதப்படுத்தப்படாத புது மீன்களை எப்படி பார்த்து வாங்குவது என்பது குறித்தும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

- எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE