சென்னையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை... அமலாக்கத் துறையும் அதிரடி!

By காமதேனு

மத்திய வருமானவரித் துறை சார்பில் சென்னையில் 10 இடங்களில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே மத்திய வருமானவரித்துறையினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை முதல் சென்னை யானைக்கவுனி, கே.கே நகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இன்னொரு புறம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் களமிறங்கி உள்ளனர். சென்னை அசோக் நகரில் பீட்டர் என்பவரின் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உட்கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வரும் பீட்டரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி இன்று மாலை தமிழகம் வரவுள்ள நிலையில் மத்திய அமலாக்க மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!

கருவறையில் நிறுவப்பட்ட ராமர் சிலை... வெளியானது முதல் புகைப்படம்!

சென்னையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை... அமலாக்கத் துறையும் அதிரடி!

'அன்னபூரணி' பட விவகாரம்... வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE