முன்னாள் எம்.பி., விளையாட்டுத்துறை அமைச்சர்... தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில் காலமானார்!

By காமதேனு

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ் கில் (86), வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார்.

மனோகர் சிங் கில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்தவர். உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திரு.எம்.எஸ்.கில், தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனளின்று நேற்று காலமானார்.

ஐஏஎஸ் அதிகாரியாக பஞ்சாப்பின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ள எம்.எஸ்.கில், இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக டி.என்.சேஷன் பதவி வகித்தபோது, தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்.

அதன் பின்னர் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனராக உயர்ந்தார். 2001ல் அவரது பணி ஓய்வுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். 2008ல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

எம்.எஸ்.கில்லுக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். அவரது உடல் டெல்லியில் இன்று அக்டோபர் 16ம் தேதி திங்கட்கிழமை தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.கில் மறைவிற்கு பிரபலங்கள், தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE