மோடி ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது... டிம்பிள் யாதவ் எம்.பி குற்றச்சாட்டு!

By காமதேனு

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி டிம்பிள் யாதவ் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

கனிமொழி, சோனியா, பிரியங்கா

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய அளவில் பிரபலமான பெண் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, பீகார் மாநில உணவுத்துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினருமான லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனிராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின், சோனியா, கனிமொழி

இந்நிகழ்ச்சியில் பேசிய, சமாஜ்வாதி எம். பி, டிம்பிள் யாதவ், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்று குற்றம் சாட்டினார். அவர் பேசுகையில், " பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது என்பதற்கு மணிப்பூர் சம்பவமே சிறந்த உதாரணம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது.

பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பைச் செயல்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பாஜக ஏமாற்றி வருகிறது" என அவர் குற்றம் சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE