விழுப்புரத்தில் 2 நாளில் 35 செ.மீ. மழை: மரக்காணத்தில் நீரில் மூழ்கிய 4 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள்

By KU BUREAU

விழுப்புரம்: தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் எடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாகமழை பெய்து வருகிறது. அந்தவகையில் விழுப்புரத்தில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று அதிகபட்சமாக 13 செ.மீமழை பெய்தது. தொடர் கனமழை யால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் மழைநீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளித்தது. மேலும் நகர விரிவாக்கப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வீதிகளில் தண்ணீர் தேங்கி, 300-க்கும் மேற்பட்டவீடுகள் தனித் தீவுகளாயின. விழுப்புரம் நகரில் தொடர்ந்து இரண்டுநாட்களில் 35 செ. மீ மழை பெய்ததால் நகர் முழுவதும் வெள்ளக் காடாகக் காட்சிஅளிக்கிறது.

மரக்காணம் பகுதியில் நேற்று முன்தினம் 10.5 செ.மீ. மழையும், நேற்று காலை வரை 6.5 செ.மீ மழையும் பெய்ததால் ஓங்கூர் ஆறு உள்ளிட்ட முக்கிய ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இந்த மழைநீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்பளங்களில்புகுந்துவிட்டது. இதனால், உப்பளங்கள் முற்றிலும் நீரில் மூழ்கிதற்போது கடல்போல் காட்சியளிக்கின்றன. சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் மூழ்கி விட்டதால் கரையோரம் இருந்த உப்புகளை அம்பாரமாக கொட்டி பாதுகாத்து வருகின்றனர். உப்பளத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலை இழந்துள்ளனர்.

கோடைகாலம் முதல் தற்போதுவரை இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக உப்பு உற்பத்திஅடிக்கடி தடைபட்டது. இந்த மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி அடுத்த ஆண்டு ஜனவரி அல்லதுபிப்ரவரி மாதத்தில் தான் தொடங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE