திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க அதவத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

By KU BUREAU

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கஎதிர்ப்பு தெரிவித்து, அதவத்தூர் கிராம மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கஎதிர்ப்பு தெரிவித்து, மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் கிராமத்தைச்சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கமாவட்டச் செயலாளர் ம.ப.சின்னதுரை தலைமையில் 1000-க்கும்மேற்பட்ட கிராம மக்கள், திருச்சிமாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, அலுவலகக் கதவுகளை மூடினர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மணி நேரத்துக்கும்மேலாக போராட்டத்தில் ஈடுபட் டனர். அதன்பின், அவர்களை மனுஅளிக்க போலீஸார் அனுமதித்த னர். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமியிடம் மனுவை அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ம.ப.சின்னதுரை கூறும்போது, ‘‘அதவத்தூர் பகுதியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைகிடைக்காது. வரிகள் உயரும் என்பதால், இணைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக 2021-ம் ஆண்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். மீண்டும் ஆக.15-ம் தேதி நடைபெறும்கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றுவோம். மக்களின்கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசை கண்டித்து சுதந்திர தினத்தன்று வீடுதோறும் கருப்புக் கொடிஏற்றி எங்களது எதிர்ப்பை தெரி விக்க உள்ளோம்’’ என்றார்.

இந்த மறியல் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக சாலையில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டகிழக்குறிச்சி ஊராட்சியில் உள்ள10 கிராமங்களை மாநகராட்சியுடன்இணைக்க எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.கவிதா தலைமையில் ஆட்சியர் அலுவலக வாசலில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர், ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE