காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைக்கும் திட்டம்... மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த முடிவு!

By காமதேனு

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் சேகரிப்படும் காலி பாட்டிகளை மேலாண்மை செய்வது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களைத் திரும்ப பெற்றுக்கொண்டு தலா ரூ.10 வழங்க உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் இத்திட்டம் தற்போது நீலகிரி, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் நாகை, திருவாரூரில் இத்திட்டம் நவம்பர் 15-ம் தேதி முதலும், குமரி, தேனி, தருமபுரியில் டிசம்பர் 1-ம் தேதி முதலும் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE