இன்று ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபானக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதனால், ஆண்டு தோறும் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து விற்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்களைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு ஆண்டு விற்பனை கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்த மாதத்தில் மட்டும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதியும், குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.