அகமதாபாத் - திருச்சி இடையே தி.மலை, காட்பாடி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

By KU BUREAU

திருவண்ணாமலை: அகமதாபாத் - திருச்சி இடையே திருவண்ணாமலை மற்றும் காட்பாடி வழியாக நான்கு மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் - திருச்சி இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அகமதாபாத்தில் இருந்து ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் தஞ்சாவூர் வழியாக திருச்சியை சென்றடையும். அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு ஆகஸ்ட் 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26, அக்டோபர் 3, 10, 17, 24, 31, நவம்பர் 7, 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அகமதாபாத் ரயில் நிலையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சி ரயில் நிலையத்தை 3-வது நாள் சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். காட்பாடி ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு வந்தடைந்து, 2.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல், திருவண்ணாமலை ரயில் நிலை யத்தை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வந்தடைந்து, 5.02 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

திருச்சியில் இருந்து அகமதா பாத்துக்கு ஆகஸ்ட் 25, செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6, 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, அகமதாபாத் ரயில் நிலையத்தை மறுநாள் திங்கள் கிழமை இரவு 9.15 மணிக்கு சென்றடையும். திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 1.10 மணிக்கு வந்தடைந்து 1.12 மணிக்கு புறப் பட்டு செல்லும். இதேபோல் காட்பாடி ரயில் நிலையத்தை ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு சென் றடைந்து 3.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE