தமிழகத்தில் செயல்படும் சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பத்தூர் அருகே சிறுவர் இல்லத்தில் உள்ள 38 பேருக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட சிறுவர் இல்லத்தின் உரிமம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு விட்டது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
சிறுவர் இல்லத்தில் இருந்த 38 குழந்தைகளும் மீட்கப்பட்டு சேவாலயா இல்லத்தில் சேர்க்கப்பட்டனர் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் செயல்படும் சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!
பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை
க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!
மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது