உதகையில் 182 மாணவிகளுக்கு ரூ.8.66 லட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் வழங்கினர் 

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் 182 மாணவிகளுக்கு ரூ.8.66 லட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று வழங்கினர்.

நீலகிரி மாவட்டம் உதகை பெத்தலக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 182 மாணவிகளுக்கு ரூ.8.66 லட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌஷிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE