குமரியில் கொட்டும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

குமரி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 63 மி.மீ., மழை பெய்தது. மழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 518 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையி்ல், அணையில் இருந்து 636 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் உபரியாக 410 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு மொத்தம் 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேறுவதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணையில் இன்றும் சுறறுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குமரி மாவட்டத்தில் இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர் மழையால் குமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE