கடந்த அதிமுக ஆட்சியின் போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட சிம் கார்டுகளில் ஒரு லட்சம் சிம் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா காலகட்டத்தின் போது நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அப்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இணைய வழியில் கல்வி பயில்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 4 ஜி டேட்டாக்களுடன் கூடிய சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அதற்காக வாங்கப்பட்ட ஒன்பது லட்சம் சிம் கார்டுகளில் 1,10,846 சிம் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதாக தணிக்கைத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு 3.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.