அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு மாநில உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர திறன் மேம்பாட்டு கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர்.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமராவதி உள்வட்ட சாலை மோசடி வழக்கு மற்றும் அங்ககல்லூ கலவர வழக்கில், முன்ஜாமீன் கோரி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் வரும் 16-ம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யக்கூடாது என இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அங்ககல்லூ கலவர வழக்கிலும் நாளை வரை யாரையும் கைது செய்ய வேண்டாம் என ஆந்திர சிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சிஐடி சார்பில், விஜயவாடா ஏசிபி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்வட்ட சாலை மோசடி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டையும் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!