’இஸ்லாமிய சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் கோவை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது’ என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ‘’ சிறையில் நீண்டகாலமாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது கோவை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் 1998ம் ஆண்டு 11 இடங்களுக்கும் மேலாக குண்டு வெடிப்பு நடைபெற்றது. 58 உயிரிழந்துள்ளார்கள், 200 பேர் பாதிக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கானோருக்கு இன்னும் கூட அந்த பாதிப்பில் உள்ளார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினரும், குண்டுவெடிப்பால் பாதிக்கபட்டவர்களும் எங்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கொடூரமாக தவறு செய்தவர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த நிலைப்பாட்டை எடுத்து விடக்கூடாது என என்னிடம் பலர் கூறுகின்றனர்
கடந்த வருடம் இதே மாதம் கோவை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதை திமுக அரசு சிலிண்டர் வெடிப்பு விபத்து என கூறிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அந்த குண்டு வெடிப்பு என்பது திட்டமிட்டப்பட்ட சதி செயல். இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் தொடர்புடையவர்கள் உள்ளார்கள் என என்.ஐ.ஏ சொல்லி உள்ளது.
இந்த சூழலில் கோவை இன்னும் கூட தீவிரவாதிகள் செயல்பாட்டில் இருக்கும் காரணத்தால் எங்கள் பகுதியின் பாதுகாப்பை பாதிக்கும் என கருதுகிறோம். இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக நீங்கள் எப்படி அரசியல் செய்கிறீர்களோ, பாதிக்கப்பட்ட இந்துக்கள் சார்பாகவும் நாங்கள் அவர்கள் குரலை பதிவு செய்ய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம்.
ஆனால் சபாநாயகர் அவர்கள் வழக்கம் போல் அமைச்சர்கள் சொல்லவேண்டிய பதில்களை எனக்கு பதில் சொல்கிறார். எங்களை முழுமையாக பேசவிடவில்லை. சட்டப்பேரவையில் நான் முழுமையாக பேசிய வீடியோவை கூட கொடுக்க மறுக்கிறார்கள். இதுதான் இவர்கள் ஜனநாயகம்’’ என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!