புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர் மாயம்!

By KU BUREAU

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய பலத்தமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து நேற்று பகலில் வெயில் அடித்தது.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், சாலைகள், கால் வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. புதுச்சேரி - கடலூர் சாலை ஏஎப்டி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிகப் பேருந்து நிலையம், லாஸ்பேட்டை காமராஜர் நகர் மற்றும் உருளையன்பேட்டை குபேர் நகர் பகுதிகளில் பல தெருக்களில் மழையால் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது.

இதில் இருசக்கர வாகனங்களும், கார்களும் மூழ்கின. நகரில் மிஷன் வீதி, லெபர்தனே வீதி உள்ளிட்ட பல இடங்களில் மரங்களும், கிளைகளும் முறிந்து விழுந்தன. இதில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. விழுந்த மரங்களை நேற்று தீய ணைப்புத்துறையினர் அகற்றினர். புதுச்சேரி அருகே வம்புபட்டு கிரா மத்தில் இடி மின்னலுடன் பெய்த மழையால் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வீடுகளில் இருந்த டிவி, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேத மடைந்தன.

இந்நிலையில் ஜீவானந்தபுரம் பகுதியில் மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு அதிகளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அன்னை பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்த ஐயப்பன் (38), பாலா, சந்துரு ஆகிய 3 பேர் பைக்கில் செல்லும்போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட பைக்கை பிடிப்பதற்காக முயற்சி செய்தபோது, மூவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் பாலா, சந்துரு ஆகி யோரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் ஐயப்பன் ஓடை வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மாயமானார். உடனே அங்கிருந்தவர்கள் கோரிமேடு போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் ஓடை வாய்க்காலில் இறங்கி தேடி னர். இருப்பினும் ஐயப்பன் கிடைக்கவில்லை. நேற்றும் தேடுதல் பணி தொடர்ந் தது. ஐயப்பனின் இருசக்கர வாகனம் மட்டும் கொக்கு பார்க் அருகே மீட் கப்பட்டது. அவரை உப்பனாறு கால்வாயில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதனிடையே ஜீவானந்தபுரம் கால்வாயில் ஐயப்பன் அடித்து செல்லப்பட்ட தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அப்பகுதி யில் நடைபெற்ற தேடும் பணியை நேற்று முன்தினம் இரவு 11 மணிஅளவில் பார்வையிட்டார். மழைநிலவரம் குறித்து கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கண்காணித் தார். அதிகாரிகளுக்கு சில அறிவுறுத் தல்களையும் அவர் வழங்கினார். புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE