ராமேசுவரத்தில் நாளை கம்பன் விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் திங்கட்கிழமை நடைபெற உள்ள கம்பன் விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ராமேசுவரத்தில் நடைபெற உள்ள கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்கான நாளை திங்கட்கிழமை காலை விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

பின்னர் பகல் 1 மணியளவில் பாம்பன் குந்துக்காலில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்திற்குச் சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் ராமேசுவரம் லெட்சுமண தீர்த்தம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்கிறார்.

இதில் மருத்துவர் இரா.குலசேகரன் எழுதிய கம்பனில் இலக்கிய தாக்கம் என்ற நூலை வெளியிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்புரையாற்றுகிறார். நூலின் முதல் பிரதியை அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த இ.ஜெயராஜ் பெற்றுக் கொள்கிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமேசுவரம் கம்பன் கழகத்தினர் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE