திமுகவினரின் தரமற்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: தினகரன் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: வாழ்ந்து மறைந்த தலைவர்கள் மீது திமுகவினரின் தரமற்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேணடும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஜெயலலிதா குறித்து திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து மறைந்த நாஞ்சில் மனோகரன் எழுதிய 'கருவின் குற்றம்' என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' குறித்தும் இதயதெய்வம் அம்மாவின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும்.

எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் திமுகவினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.' இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE