ஆட்டோவில் பயணி தவறவிட்ட 1.22 லட்ச ரூபாயை காவல் நிலையத்தில் ஓட்டுநர் ஒப்படைத்தார். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் 5000 ரூபாய் சன்மானம் வழங்கி ஆட்டோ ஓட்டுநரை கவுரவித்தார் பெண் பயணி.
சென்னை எருக்கஞ்சேரி அண்ணாசாலை பகுதி சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீதர்(48). இவர் நேற்று மாலை வள்ளுவர் கோட்டம் லேக் ஏரியாவில் இருந்து ஒரு பெண் பயணியை ஆட்டோவில் ஏற்றி கொண்டு தி.நகரில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வேறோரு பயணியை ஏற்றிக்கொண்டு அரும்பாக்கத்துக்கு சென்றார். அங்கு அடுத்த சவாரிக்காக காத்திருந்த ஓட்டுஎர் ஸ்ரீதர் ஆட்டோவில் பின் இருக்கையில் ஒரு கைப்பை இருப்பதை கண்டார். பின்னர் ஸ்ரீதர் அந்த கைப்பையை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ஸ்ரீதர் அந்த பணப்பையை எடுத்துக்கொண்டு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் பையை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ஸ்ரீதர் பையை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீஸார் அந்த பையை திறந்து பார்த்த போது அதில் 1,22,490 லட்ச ரூபாய் பணம், அடையாள அட்டை, சான்றிதழ்கள் இருந்து. உடனே போலீஸார் அடையாள அட்டை வைத்து பணப்பையை தவறவிட்ட நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவை சேர்ந்த பூர்ணிமா(37) என்பவரை நேரில் வரவழைத்து பையை ஒப்படைத்தனர்.
பூர்ணிமா தனது கணவருடன் வந்து பணத்தை பெற்றுக் கொண்டார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதரின் நேர்மையை பாராட்டிய பூர்ணிமா பணம் கிடைத்த மகிழ்ச்சியில் 5000 ரூபாய் சன்மானம் வழங்கி அவரை கவுரவித்தார். அதுமட்டுமின்றி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஸ்ரீதரை காவல்துறை அதிகாரிகளும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!