திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதையடுத்து மாநகராட்சி பகுதியில் பழமையான கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் நேற்று மாநகர நகரமைப்பு அலுவலர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பழமையான கட்டிடங்கள் 66 இருப்பது கண்டறியப்பட்டது. இதன் உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பழமையான மற்றும் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிக்கொள்ள அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
» ஆவின் பால் கொள்முதல் சில வாரங்களில் அதிகரிக்கும்: மேலாண்மை இயக்குநர் நம்பிக்கை
» நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அவதி