முகமது பைசல் எம்பியாக நீடிக்கலாம்; ஆனால்... தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

By காமதேனு

2வது முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு மக்களவைத் தொகுதி உறுப்பினர் முகமது பைசல், எம்.பி.யாக தொடர தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்தீவுகள் தொகுதியில் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல். இவர் மீது கடை ஒன்றின் முன்பு தடுப்புகள் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சாலி என்பவரை அடித்து காயப்படுத்தி, கொலை செய்ய முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம், முகமது ஃபைசல் உட்பட 4 பேருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக முகமது பைசல் வகித்து வந்த எம்பி பதவியை ரத்து செய்து, மக்களவைச் செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

கேரள உயர்நீதிமன்றம்

இதை எதிர்த்து முகமது பைசல் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் தண்டனையை நிறுத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மீண்டும் முகமது பைசலுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம்

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகமது பைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இருப்பினும், முகமது பைசல் எம்.பி.யாக தொடரலாம் என்றும், 6 மாதத்துக்குள் விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!

‘இஸ்ரேலில் நடக்கும் படுகொலைக்கு உடனே குரல் கொடுக்கும் மோடி, மணிப்பூர் பிரச்சினையில் மவுனம் காப்பது வெட்கக்கேடு’

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE