சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் சோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சோதனைகள் முடிந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக செந்தில் பாலாஜியால் நடக்க முடியாததால் அவரை வீல் சேரில் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
புதிய மதுக்கடைகள் திறக்கவேண்டும்... முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னையில் சோகம்: பயிற்சியின் போது ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!